
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 6 மீனவர்களை விடுவிக்க இலங்கை ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.
அவர்கள் 6 பேரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேசுவரத்துக்கு அனுப்பிவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.