/

லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணம்!

ஸ்வாசிகா - பிரேம் ஜேக்கப் திருமணம் குறித்து...

News image
ஸ்வாசிகா - பிரேம் ஜேக்கப்
Updated On :30 ஜனவரி 2025, 8:19 am

DIN

லப்பர் பந்து நடிகை - ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்வாசிகா முதன்முதலில் தமிழில் வைகை என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கோரிபாளையம், சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவைத் தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

Story image

மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர், லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதையும் படிக்க:

Story image

லப்பர் பந்து படத்தின் வெற்றிக்குப் பிறகு சூரியின் மாமன் படத்திலும் ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யா - 45 படத்திலும் பிரதான வேடங்களில் ஸ்வாசிகா நடிக்கிறார்.

இதனிடையே இவர், நீ நான் காதல் தொடர் நாயகன் பிரேம் ஜேக்கப்பைக் காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இவருக்கும் கடந்த 2024 ஜனவரியில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், பிரேம் ஜேக்கப் - ஸ்வாசிகா ஆகியோர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில் இந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இவர்களின் திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.