காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை
காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் என். ரங்கசாமி .
காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் என். ரங்கசாமி .
Updated on
1 min read

புதுச்சேரி: மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் மற்றும் துணைத் தலைவர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசத் தலைவர்களை போற்றி பாரதியார் பல்கலை மாணவர்களின் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com