
இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வந்து விளையாடவிருப்பதை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இது இருநாடுகளுக்கும் இடையில் தீவிரமான போராக மாறியதில் பாகிஸ்தான் தரப்பில் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் எந்த உறவும், இரு நாடுகளுக்கு இடையிலான எந்தப் போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் நடைபெறவுள்ளதாக தொடர்களில் விளையாட வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் மோதுவது ஒரு தடையாக இருக்காது எனக் கருதப்படுகிறது. ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு வந்து விளையாட எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.
ஆசியக் கோப்பைத் தொடர் பிகாரின் ராஜகிரில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூனியர் உலகக் கோப்பை தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை மற்றும் மதுரையில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகள், நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
பல்வேறு சர்வதேச நாடுகள் விளையாடும் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு தடைவிதிக்கமுடியாது. இந்தியாவுக்கு எதிரான நாடு பாகிஸ்தான் கிடையாது. இருதரப்பு போட்டிகள் வேறு; சர்வதேச தொடர்கள் வேறு என்றும் மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.