பட்டாசு ஆலை வெடிவிபத்து... தொடரும் உயிரிழப்பு!

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி அழகு ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வெடி விபத்தில் இடிந்து தரைமட்டமான அறைகள்
வெடி விபத்தில் இடிந்து தரைமட்டமான அறைகள்
Published on
Updated on
1 min read

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி அழகு ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கமல்குமாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட வெடிவிபத்தில் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளா்கள் 5 போ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் செவல்பட்டி லிங்கசாமி (45) புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.

மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகலட்சுமி, மதுரை அரசு மருத்துவமனைக்கும், மணிகண்டன் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். காயமடைந்த அழகுராஜ், கருப்பசாமி ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில்,சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு ராஜா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயரிழந்தார். இதையடுத்து, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்தது. விபத்தில் காயமடைந்த 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்து சிக்கிச்சை பெற்று வருபவர்கள் தொடந்து உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

A worker named Azhugura Raja, who was injured and undergoing treatment in an explosion at the Chinnakkamanpatti cracker factory near Sattur, died on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com