நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம்!

நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம் குறித்து...
சரோஜா தேவி
சரோஜா தேவி கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நடிகை சரோஜா தேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று(ஜூலை 14) காலமானார்.

தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை சரோஜா தேவி.

பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்றவருமான சரோஜா தேவியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இன்று பகல் 11 மணி வரையில் மல்லேஸ்வரம் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர், அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சரோஜா தேவியின் சொந்த ஊரான சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

நடிகை சரோஜா தேவியின் இறுதிச் சடங்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொடிஹள்ளி தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழுங்க நடிகை சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Summary

Actress Saroja Devi's body was cremated today (July 15) with full state honors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com