ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பாமக நிறுவனத் தலைவர் ச.ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 87-ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன் என்று் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் ராமதாஸ் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Political party leaders, legislators, and senior executives are wishing PMK founder Dr. Ramadoss on his 87th birthday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.