கிருஷ்ணகிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
Bakrid festival
பக்ரீத் சிறப்புத் தொழுகைDPS
Updated on
1 min read

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பக்ரித் திருநாளையொட்டி கிருஷ்ணகிரி அடைத்த ராஜூ நகரில் அமைந்துள்ள. ஈத்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக இஸ்லாமியர்கள் ஊர்வலமாகச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, பர்கூர், சூளகிரி, ஒசூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தொழுகைக்குப் பின்னர் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து குர்பானி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com