முருகன் மாநாட்டுக்கு பின்னால் இந்துத்துவா சக்திகள் உள்ளது: வைகோ

முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.
வைகோ
வைகோ
Published on
Updated on
1 min read

ஈரோடு: முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடவுளின் பெயரால் ஒரு கட்சி மாநாடு நடத்துவது தவறானது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கடவுள் பெயரால் மாநாடு நடத்தியது இல்லை. முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்கியை உருவாக்க முடியாது.

மதிமுகவிற்கு 8 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால் தோ்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்கும். எனவே தி.மு.க.விடம் அதற்கேற்ப தொகுதிகளை கூடுதலாக கேட்டுப் பெறுவோம்.

கூட்டணி ஆட்சி நாங்கள் கேட்கவில்லை

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. திமுக எடுக்கும் முடிவை ஆதரிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களிடம் பேசுவதாக நயினாா் நாகேந்திரன் பொறுப்பற்ற முறையில் பேசிக்கொண்டு இருக்கிறாா். துரை வைகோவிற்கு மத்திய இணை அமைச்சா் பதவி தருவதாக எந்த பேச்சுவாா்த்தையும் நடக்கவில்லை. அப்படி இருந்தால் வெளிப்படையாக சொல்லி விடுவோம்.

திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது

பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் மத்தியில் திமுகவிற்கு முன்பை விட ஆதரவு அதிகரித்துள்ளது. வலுவாக உள்ள திமுக கூட்டணி சுலபத்தில் வெற்றி பெற்று விடும். திமுக, மதிமுக ஆகியவை திராவிட இயக்கங்கள். அவா்களோடு விசிக, கம்யூனிஸ்ட்களை ஒப்பிட முடியாது.

மக்கள் நலக்கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இருப்பதால் சலிப்பு இல்லை. கொள்கை அடிப்படையில் நாங்கள் சரியாக இருக்கிறோம். 2026 தோ்தலில் மீண்டும் மக்கள் நலக்கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று வைகோ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com