விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
முதல்வர் மோகன் யாதவ்
முதல்வர் மோகன் யாதவ்
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமானது ‘மாதவ் புலிகள் காப்பகம்’ எனும் பெயரில் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் ’புலிகளின் மாநிலம்’ எனும் பெருமையை தக்கவைப்பதுடன் புதிய சாதனைகளை நோக்கி நகர்வதாக முதல்வர் மோகன் யாதவ் இன்று (மார்ச் 5) கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புலிகள் காப்பகத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் விடுதிகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் சுற்றுலாக் காலம் முழுவதும் மக்களால் நிறைந்திருப்பதாகவும்; இது மத்தியப் பிரதேசத்தின் மீதான சுற்றுலாப் பயணிகளின் அன்பையும், அம்மாநிலத்தின் காடுகளின் வளமையையும் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 950 பில்லியன் டாலர்!

இந்நிலையில், புதிய மாதவ் புலிகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சம்பல் பகுதியில் மாநில அரசு ஒரு புதிய சுற்றுலாப் பகுதியை உருவாக்கும் என்றும் இதனால் அப்பகுதியின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் யாதவ் கூறியதாவது: ஒருபுறம், ஆசியாவில் நமது சம்பல் பகுதியில் சிறுத்தைகள் மீண்டும் சுற்றித் திரிவதைக் காணலாம். மேலும், சம்பல் ஆற்றில் டால்பின் கரியல் திட்டத்திற்கான பணிகளும் அதேப் பகுதியில் நடந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், அந்தப் பகுதியில் கழுகுகள் நிறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் விரைவில் அங்கு இரண்டு புலிகளை விடுவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com