சுரங்கத்தில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! தொழிலாளி பலி!
சத்தீஸ்கரின் நாராயணப்பூர் மாவட்டத்திலுள்ள சுரங்கத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
நாராயணப்பூர் மாவட்டத்திலுள்ள ஆம்டை காட்டி இரும்பு தாது சுரங்கத்தில் இன்று (மார்ச் 7) தொழிலாளிகள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நக்சல்கள் நிறுவியிருந்த ஐ.ஈ.டி. எனும் நவீன வெடிகுண்டின் மீது கால் வைத்த தொழிலாளிகள் இருவர் அது வெடித்ததில் தூக்கி வீசப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த திலிப் குமார் பாகெல் மற்றும் ஹரேந்திரா நாக் ஆகியோரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு, அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதையும் படிக்க: ஹோலி: வர்ணங்களை விரும்பாதவர்கள் வெளியே வர வேண்டாம் - உ.பி. காவல் அதிகாரியால் சர்ச்சை
இந்நிலையில், சம்பவம் நடந்த சுரங்கத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆம்டை காட்டி இரும்பு தாது சுரங்கம் ஜெயஸ்வால் நெகோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எனும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நக்சல்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த பிப்.5 அன்று இந்த சுரங்கத்தில் இதேபோன்ற வெடிகுண்டு தாக்குதலில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். மேலும், 2023 நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.