
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 7) நிறைவு பெறுவதால் இதுவரை விண்ணப்பிக்காத தோ்வா்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 7) நிறைவு பெறவுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் https://neet.nta.nic.in/neetug-2025-registration-and-online-application/ வலைதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை என்டிஏ இணையதளத்திலோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.