
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(மார்ச் 14) காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்தது.
இந்த ஆண்டு ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.
பிற மொழியைத் தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பட்ஜெட் குறித்து, 'எல்லார்க்கும் எல்லாம்' என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.