
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றுமாறு திமுகவினருக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள். சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜனவரி. 27 ஆம் தேதி உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்த தீர்ப்பு மார்ச் 3 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றுமாறு திமுகவினருக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழ நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், அவர்களது பகுதிகளில் உள்ல தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை ‘மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாள்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் - அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.