ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ஹிந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாதா?: சு.வெங்கடேசன் எம்.பி

ஹிந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவிற்கு கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்தி

நாடாளுமன்றத்தில் பேசும் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்.

Published On :

ஹிந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவிற்கு கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,

நாடாளுமன்றத்தில் நான் சமக்ரா சிக்சா அபியான் திட்டத்திற்கான ரூ 2154 கோடி நிதியை மத்தி அரசு நிறுத்தி வைத்திருப்பது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன்.

அதில், தமிழ்நாட்டுக்கு ரூ 2154 கோடிகளை மத்திய அரசு நிறுத்தி வைத்து இருக்கிறதா? ஏன் நிறுத்தப்பட்டுள்ளது? தேசிய கல்விக் கொள்கையின் பகுதியாக ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பது மொழி பன்மைத்துவத்திற்கு எதிரானது இல்லையா? கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மாறானது இல்லையா என்றெல்லாம் கேட்டிருந்தேன்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது என்று சிலாகித்து சமக்ரா சிக்சா அபியான் பற்றியும் விலாவாரியாக தெரிவித்துள்ளார்.

2023 - 24 இல் ரூ. 1876 கோடி தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது என்றும், 2024 - 25- க்கு ரூ. 4,305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருவதாகவும், மும்மொழிக் கொள்கையானது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமலாக்கப்படும் என்றும், எந்த மொழியும் மாநிலத்தின் மீது திணிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் தெரிவின் அடிப்படையிலேயே மொழிகளை கற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் தொலைக்காட்சி பங்கேற்பாளர்கள் போலவே அமைச்சர்களின் நாடாளுமன்ற பதில்களும் அமைந்து வருகிறது என்பதன் வெளிப்பாடே இது. கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும்.

தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் நிதியை நிறுத்தி இருக்கிறோம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட அமைச்சரின் பதிலில் இல்லை. தாங்கள் செய்ததை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியவில்லை. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் இருந்து சிரிக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை தருவது என்று சொல்லிவிட்டு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது என்கிற முரண் எவ்வளவு மோசடித்தனமானது, குரூரமானது, மக்களை ஏமாற்றுவது! ஹிந்தியைத் திணிக்கவில்லை என்று அமைச்சர் தருகிற விளக்கம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.

ஹிந்தி திணிப்பை நியாயப்படுத்தி நாள்தோறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஹிந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவிற்கு அவர்களுடைய விவாத தரம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் தமிழ் மொழியில் படிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் இருந்து தானே முதலில் தாய்மொழிக் கல்வி துவங்கி இருக்க வேண்டும்! ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான முடிவுகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கலாமா என்ற கேள்விக்கும் அமைச்சரிடம் பதில் இல்லை.

எங்கு கேட்டாலும் பொறுப்பான பதில் கிடைக்காது என்கிற ஒன்றிய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத அணுகுமுறையின் உச்சம் நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.