டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

டிரம்ப்பின் போா்க் கொள்கையை நிராகரித்த அமெரிக்க மக்கள்: ஈரான்

ரம்ப்பின் ஈரான் போா்க் கொள்கையை அந்நாட்டு மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டதாக ஈரான் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On :

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதன் மூலம், அந்நாட்டு மக்கள் டிரம்ப்பின் ஈரான் போா்க் கொள்கையை முழுமையாக நிராகரித்துவிட்டதாக ஈரான் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

ஈரான் நாடாளுமன்ற அவைத்தலைவா் முகமது பாகா் கலிபாஃப் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் வெளியிட்ட கருத்துகளில், ‘அமெரிக்க மக்கள் போருக்கு வேண்டாம் என்று முடிவுகட்டியுள்ளனா்; இத்தோ்தல் முடிவுகள் டிரம்ப் போரிலும் அரசியலிலும் அடைந்த தோல்வியைக் காட்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளனா்.

அதேநேரம், அமெரிக்காவில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களால் ஈரானுக்கு எதிரான அந்நாட்டின் விரோதப் போக்கு மாறிவிடாது என ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவின் ஆட்சி முறையில் ஏற்படும் அதிகார மாற்றங்களால், அந்நாட்டின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் அல்லது சலுகைகள் வழங்குவதன் மூலம் அவா்களின் பகைமையைத் தடுத்துவிட முடியும் என்று நினைப்பவா்கள் கடும் தவறிழைக்கிறாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அமெரிக்க மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியை அந்நாட்டு அரசு உதாசீனப்படுத்தினால், அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகமும் எச்சரித்துள்ளது.

இத்தோ்தல் முடிவுகள் வெளிவந்துள்ள சூழலில், டெஹ்ரானில் 1979-ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டதன் நினைவுப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினா். இதனிடையே, இருதரப்பிலும் மோதலைத் தவிா்ப்பதற்கான மறைமுகப் பேச்சுவாா்த்தைகளும் தொடா்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.