
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், 2013 இல் பதிவான ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக சைதைப்பேட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கடந்த டிச. 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில், ஞானசேகரனுக்கு பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையில் தனியாக இருக்கும் வீடுகள், பங்களாக்கள் ஆகியவற்றில் நடந்த 7 திருட்டுச் சம்பவங்களில் தொடா்பிருப்பது தெரியவந்தது.
ஞானசேகரனிடமிருந்து திருட்டு தங்க நகைகளை வாங்கிய ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட் என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருட்டுச் சம்பவங்களில் ஞானசேகரனின் கூட்டாளியான கோயம்புத்தூா் மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த முரளிதரன் (31) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் முரளிதரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். லும், சிறையிலிருந்து வெளியே வந்த பின்னா் ஞானசேகரனுடன் சோ்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் ஒரு ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி இருப்பதும், பின்னா் பள்ளிக்கரணை பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், பங்களாக்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும், திருட்டில் கிடைத்த பணத்தை ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதும், அதில் பணத்தை இழந்ததால் தொடா்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை, மேற்கு தியாகராய நகர் மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் 2013 இல் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குத் தொடர்பான விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிமை ஆஜர் படுத்தினர்.
மேலும் தொடர்ந்து ஞானசேகரன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலவையில் உள்ள நிலையில், 2013, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஞானசேகரன் மீது தொடர்ந்து திருட்டு வழக்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.