தமிழக அரசு
தமிழக அரசு

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
Published on

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ப்ரவேஷ் குமார், சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்‌ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக இருந்தவர்.

சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர் தற்போது காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com