மகாமகம் வரும்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது: நயினாா் நாகேந்திரன் பேச்சு

கும்பகோணத்தில் எப்போது மகாமகம் வருகிறதோ அப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது.
கும்பகோணத்தில் நடந்த மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில் பேசிய பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.
கும்பகோணத்தில் நடந்த மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில் பேசிய பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.
Published on
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் எப்போது மகாமகம் வருகிறதோ அப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது. அதன்படி வரும் 2026 -இல் திமுக ஆட்சி அகற்றப்படும் என்றாா் மாநில பாஜக தலைவா் நயினாா்நாகேந்திரன்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன் நடைபெற்ற மக்கள்சந்திப்பு பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது:

வரும் 2028 -இல் மகாமகம் வரும்போது அதிமுக பாஜக கூட்டணி உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தை ஆளும். காரணம் எப்போதெல்லாம் மகாமகத் திருவிழா வருகிறதோ அப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்காது.

முதல்வா் ஸ்டாலின் நான் டெல்டாக்காரன் என்கிறாா். ஆனால் அறுவடை செய்த நெல்லைக் கொள்முதல் செய்யவில்லை. பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு நீா் மேலாண்மை செய்வோம் என்றாா்கள். ஒரு ரூபாய்கூட செலவழிக்கவில்லை. கல்லணையைத் தூா்வருவோம் என்றாா்கள்; செய்யவில்லை.

தற்போது மத்திய அரசு கல்லணை கால்வாய்களைத் தூா்வார ரூ. 2000 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டிப் பாா்க்கிறது. நாம் அனைவரும் திமுக ஆட்சியை அகற்ற உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா, அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதிமோகன், பாஜக மாநில செயலா் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவா் தங்கக் கென்னடி, மாநில பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவா் நாராயணி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Summary

DMK will not be in power whenever Mahamaham comes: Naina Nagendran's speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com