

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 4.50 குறைந்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக சிலிண்டர்களின் விலை புது தில்லியில் ரூ.1,590.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,694. ஆகவும், மும்பையில் ரூ.1542 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை
எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் ரூ.868.50 ஆக தொடர்கிறது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ.853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.852 ஆகவும், மும்பையில் ரூ.582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை மாதம் ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், அக்டோபரில் சற்று அதிகரித்த நிலையில், நவம்பரில் சற்று குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.