தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனையாகிறது.
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை புதன்கிழமை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை வியாழக்கிழமை(நவ.6) பவுனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

அதேபோன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.164-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.64 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices rise again: How much did it rise per 8 gram?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com