

தெலங்கானா முதல்வர் ரேவந்த் அனுமுலா ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ரேவந்த் அனுமுலா ரெட்டி இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
அவரது பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
தெலங்கானா முதல்வர் ரேவந்த் அனுமுலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
அவர் மகிழ்ச்சியோடும், நல்ல உடல்நலத்தோடும் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டுச் சிறந்திட விழைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.