வாக்குத் திருட்டிற்காக மோடியும், அமித் ஷாவும் பிடிபடுவார்கள்: ராகுல்

வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காகப் பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பிடிபடுவார்கள் என ராகுல் தெரிவித்தது தொடர்பாக...
பிகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
பிகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

கிஷன்கஞ்ச்: வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காகப் பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பிடிபடுவார்கள் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, நீங்கள் பயன்படுத்தி வரும் செல்போன்களில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு பதிலாக, பிகாரில் தயாரிக்கப்பட்டது என்பதை எழுத வேண்டும் நான் விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் எத்தனை தொழிற்சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளார்? என கேள்வி எழுப்பிய ராகுல், தொழிற்சாலைகள் அமைக்க பிகாரில் நிலம் இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையிலே பொய் சொல்கிறார். ஆனால், அதானிக்கு ஒரு ஏக்கர் ரூ.1 என்ற விலையில் நிலம் வழங்கியுள்ளனர்.

வாக்குத் திருட்டு குறித்து பதில் இல்லை

வாக்குத் திருட்டு குறித்து பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் தோ்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. ஆனால் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காகப் மோடியும், அமித் ஷாவும் பிடிபடுவாா்கள் என்றார்.

நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை

மேலும், பிகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை. வாக்குச் சாவடியில் விழிப்புடன் இருக்க வேண்டியது உங்களது பொறுப்பு, பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பிகாா் மக்கள் ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் என்று ராகுல் கூறினார்.

112 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Summary

Lok Sabha Leader of Opposition Rahul Gandhi speaks during an election meeting at Shishabari, in Purnia on Sunday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com