

தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலை, இயக்கியம், அறிவியலில் சிறந்து விளங்குபவர்களுக்கு 1957 முதல் பிரான்ஸ் அரசு உயரிய விருதான "செவாலியர்" விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த நிலையில், புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலைத் துறை பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேன்(1995), கமல்ஹாசன்(2016) உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். தற்போது, அந்த வரிசையில் தோட்டா தரணி இணைந்துள்ளார்.
இந்த விருது சென்னையில் நாளை(நவ.13) பிரான்ஸ் கலாசார மையத்தில் வைத்து வழங்கப்படுகிறது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவிக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில் செவாலியர் விருதும் பெறும் தோட்டா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியார் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணிக்கு, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரிய ஆளுமைகளின் வரிசையில் தோட்டா தரணி இணையுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சானைக்குப் பாராட்டுகள்! என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.