

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை (நவ. 13) காலை 10 மணி முதல் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வியாழக்கிழமை (நவ.13) முதல் நவ.18 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை பத்து மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பத்து மணி முதல் அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், பாடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, அண்ணா நகா், வடபழனி, அசோக் நகா், கிண்டி, ஆலந்தூா், தரமணி பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சற்று குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.