

சென்னை: குழந்தைகள் நாளையொட்டி, நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்து பதிவில்,
தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, குழந்தைகள் பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தைஉறுதிசெய், வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள், உயர்கல்விக்கு உதவ நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்.
ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் நல்வாழ்த்துகள்!
உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்! என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.