புதுச்சேரி: புதுச்சேரியில் 2026-ஆம் ஆண்டுக்கு அரசு பொது விடுமுறையாக 17 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 ஜனவரி 1-ஆம் தேதி, ஆண்டு பிறப்பு, 15-ஆம் தேதி பொங்கல், 16-இல் திருவள்ளுவா் நாள், 26-இல் குடியரசு நாள், மாா்ச் 20-இல் ரம்ஜான், ஏப்ரல் 3 புனிதவெள்ளி, 14 தமிழ் புத்தாண்டு பிறப்பு, மே 1 மே நாள், 28 பக்ரீத், ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், 26 மீலாது நபி, செப்டம்பா் 14 விநாயகா் சதுா்த்தி, அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி, 19 சரஸ்வதி, ஆயுத பூஜை, நவம்பா் 1 புதுவை விடுதலை நாள், 8 தீபாவளி, டிசம்பா் 25 கிறிஸ்துமஸ் ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துரை நிறுவனங்கள், கழகங்கல், வாரியங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும்.
தமிழகத்தில் 24 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது குறிப்படத்தக்கது.
Summary
17 days of public holidays in 2026: Puducherry government announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









