புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்
புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை கன மற்றும் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும், மணிக்கு 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை அடுத்து தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், புதுச்சேரி பகுதிக்கு மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மக்கள் அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறும் ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கனமழை குறித்த புகாா்களை உதவிகளுக்கு இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 94889 81070 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Summary

District Collector Kulotungan has appealed to the public to remain vigilant and avoid stepping out unless absolutely necessary. He urged residents to follow official government advisories, refrain from believing or spreading rumours, and stay updated through verified information channels.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com