

புது தில்லி: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை(நவ.21) பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை(நவ.22, 23) ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை(நவ.21) தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மோடி ஆறாவது ஐபிஎஸ்ஏ உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார். மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளில் பங்கேற்கும் மோடி, காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்தும் பேசும் பிரதமர் மோடி, "வசுதைவ குடும்பகம்" மற்றும் "ஒரே உலகம், ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்" என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இந்தியாவின் கண்ணோட்டத்தை உச்சிமாநாட்டில் முன்வைப்பேன்" என்று மோடி தென்னாப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.