சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 9 பெண்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 11 பேர் பலியாகினர், 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே, காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (டிஎன் 39 என் 0198) அரசுப் பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (டிஎன் 63 என் 1776) அரசுப் பேருந்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்துகளில் இருந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உள்பட 11 பேர் பலியாகியுள்ளதாகவும், தற்போதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த கோர விபத்துக்கு திண்டுக்கல் சென்ற அரசுப் பேருந்து அதிவேகமாக சென்றதே காரணம் என கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான பேருந்துகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் உள்ளூர் மக்கள்.
Summary
Bus accident near Tirupattur: 11 killed, 35 injured
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி, 42 பேர் காயம்

கர்நாடகாவில் கோர விபத்து: லாரி - எம்யுவி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி; 2 பேர் காயம்
சென்னையில் 2 அரசுப் பேருந்துகள் மோதி விபத்து! 4 பேர் காயம்!







