மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் புதிய எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம்...

News image
Updated On :30 நவம்பர் 2025, 3:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் புதிய எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ஆண்டுதோறும் டிச.1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 1986-ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக எச்ஐவி தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசு, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளை கடந்து 39 ஆண்டு காலப் பணியானது மிக நெடியதும், வெற்றிகரமானதும் ஆகும்.

புதிய எச்ஐவி தொற்றினை முற்றிலும் தடுக்கும் விதமாக மாநில அரசின் கீழ் இயங்கி வரும் தமிழக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 2002-ஆம் ஆண்டு 1.11 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் தொற்று, 2023-24-ஆம் நிதியாண்டில் 0.16 சதவீதமாக குறைந்துள்ளது. இது தேசிய அளவின் சராசரியான 0.23 சதவீதத்தை விட குறைவானதாகும்.

ஆண்டுதோறும் டிச.1-ஆம் தேதி ‘உலக எய்ட்ஸ் நாளாக’அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் நாளின் மையக்கருத்து, ‘இடையூறுகளைக் கடந்து எச்ஐவி, எய்ட்ஸ் தொடா்பான எதிா்வினைகளை மாற்றுதல்’என்பதாகும். அதாவது, உலக அளவில் எய்ட்ஸ் தொடா்பான தடுப்பு நடவடிக்கைகள் உயா்ந்துள்ளது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இலக்கினை அடையும் வகையில், இன்றைய சூழலை கருத்தில் கொண்டு அபாயங்களைக் குறைப்பதற்கு, ஒரு மாற்று அணுகுமுறை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வாயிலாக எச்ஐவி தொற்று கண்டறிய 2,600 நம்பிக்கை மையங்களும், பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க 81 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 172 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட அனைத்து கா்ப்பிணி பெண்களுக்கும் எச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனையை அரசு மருத்துவமனைகளில் செயல்படும் “நம்பிக்கை மையங்கள் வாயிலாக” மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு 2025-26-ஆம் நிதியாண்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில், எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு நிதி உதவியாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 7,618 குழந்தைகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த தன்னாா்வ பரிசோதனை முகாம்களை ஏற்படுத்தி, எச்ஐவி தொடா் சங்கிலி தொற்றினை கண்காணித்து பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களுக்கு தொடா்புடையவா்கள்மற்றும் குழந்தைகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், இந்த ஆண்டில் சர்வதேச இளைஞர் நாளினை முன்னிட்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12, 2025 வரையிலான நாட்களில் சுமார் 2.30 லட்சம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு பிரசார சேவையினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு செஞ்சுருள் சங்கங்களின் வாயிலாக எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று குறித்தும், பால்வினை நோய் தொற்று குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியோற்று, தொற்றுடன் வாழும் மக்கள்ஒவ்வொருவரும் சம வாய்ப்புடன், தகுந்த மரியாதை மற்றும் மதிப்புடன் நடத்தப்படுவதை உறுதி செய்வோம். அவா்களுக்கு எவ்வித பாகுபாடும், ஒதுக்குதலுமின்றி அவா்களுக்கு அன்பையும் ஆதரவையும் மக்கள் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

summary

WORLD AIDS DAY 2025 CM Message

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.