
காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளையொட்டி, காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
நமது நாட்டில் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு அகிம்சையால் முடிவுகட்ட முடியும் என்பதைத் தனது செயலால் நிரூபித்த, தேசப்பிதாவாகப் போற்றப்படுகின்ற மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று.
தேசத்தின் விடுதலைக்காக சத்தியாகிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் என பல்வேறு போராட்டங்களை அமைதி வழியில் முன்னெடுத்து, அதில் வென்று காட்டிய மகாத்மா காந்தி அவர்களின் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறோம்.
காமராஜர் நினைவு நாள்
தமிழகத்தில் ஏழைகளின் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், நீர் மேலாண்மை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களின் முன்னோடியாக போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று.
எண்ணிலடங்கா அணைகள், மாணவர் பசி போக்க மதிய உணவு, தொழிற்புரட்சி என தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பணிகளை முன்னெடுத்த கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.