மோடி அரசின் சதியை முதல்வர் முறியடிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

மாநில உரிமைக்குள் மத்திய அரசு தலையிடுகிறது. மோடி அரசின் இந்த சதியை முதல்வர் முறியடிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ரவிக்குமார்
ரவிக்குமார்
Published on
Updated on
1 min read

மாநில உரிமைக்குள் மத்திய அரசு தலையிடுகிறது. மோடி அரசின் இந்த சதியை முதல்வர் முறியடிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இளங்கலை வேளாண் படிப்புக்கு தேசிய நுழைவுத் தேர்வு

நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20 சதவீத இளங்கலை இடங்கள் இனி ‘க்யூட்-ஐசிஏஆர்’அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

ப்ளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில உரிமைக்குள் தலையிடும் மோடி அரசின் இந்த சதியை முதல்வர் முறியடிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவில் வெளியிட்டிருப்பதாவது:

வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் அறிவிப்பு மாநில உரிமைக்குள் தலையிடுவதாகும்.

இதுவரை ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசின் கீழ் நடைபெறும் அட்மிஷனை நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தனது பிடிக்குள் கொண்டுவரப் பார்க்கும் மோடி அரசின் சதியைத் தமிழ்நாடு முதல்வர் முறியடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

The Chief Minister must thwart the Modi government's conspiracy vck Ravikumar MP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com