
புது தில்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருக்கிறார்.
ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸின் அழைப்பின் பேரில் ராஜ்நாத் ஆஸ்திரேலியாவுக்கு பயணத்தை மேற்கொள்கிறார்.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவும் ஆஸ்திரேலியா இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மை (சிஎஸ்பி) நிறுவப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கொண்டாடும் நேரத்தில் ராஜ்நாத் சிங் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறாா். கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த ரிச்சர்ட் மார்லெஸ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினாா்.
இந்த நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறாா்.
சிட்னியில் இரு நாடுகளின் தொழில் துறைத் தலைவா்கள் பங்கேற்கும் வணிக வட்டமேசை மாநாட்டிற்கும் பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்க உள்ளார், இதில் இரு தரப்பு தொழில்துறைத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். ஆஸ்திரேலியாவின் பிற தேசியத் தலைவர்களையும் ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளாா்.
இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வியூக ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கான புதிய-ஆக்கபூா்வமான வழிமுறைகளை ஆராய்வதற்கு இந்த பயணம் சிறந்த வாய்ப்பாகும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், பாதுகாப்புத் துறை தகவல் பகிா்வு, கடற்சாா் பாதுகாப்பு உறவுகள் விரிவாக்கம் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க மூன்று ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.
கடந்த 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.