பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்!

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக (அக்.8) புதன்கிழமை காலை மும்பை வந்தடைந்தார்.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரை  மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், மாநில முதல்வர் தேவேந்திர  ஃபட்னவீஸ் வரவேற்றனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரை மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வரவேற்றனர்.
Published on
Updated on
1 min read

மும்பை: பிரிட்டன் பிரதமர் கியர் ஸடார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக (அக்.8) புதன்கிழமை காலை மும்பை வந்தடைந்தார்.

லண்டனில் இருந்து பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், தொழில் துறையினா் என 100-க்கும் மேற்பட்டோருடன் விமானம் மூலம் மும்பை வந்த ஸ்டார்மரை, மகாராஷ்டிரம் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் மற்றும் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் ஆகியோர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் மோடியும் ஸ்டார்மரும் வியாழக்கிழமை சந்திப்பின்போது ஆலோசிக்கவுள்ளாா்.

அப்போது இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ), ‘தொலைநோக்குத் திட்டம் 2035’, தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளனா்.

மும்பையில் நடைபெறும் 6-ஆவது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப மாநாட்டில் இருவரும் பங்கேற்று உரையாற்றுகின்றனா்.

75 நாடுகளைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகா்கள், கல்வியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், 7,500 நிறுவனங்கள், 800 பேச்சாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொள்கின்றனா்.

பிரிட்டன் பிரதமராக கியா் ஸ்டாா்மா் பதவியேற்ற பின்னா் அவா் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.

Summary

The United Kingdom Prime Minister Keir Starmer arrived in Mumbai on Wednesday, ahead of his meeting with PM Narendra Modi in India's financial capital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com