
ஒசூ: கா்நாடக மாநிலம், ராம்நகருக்குச் செல்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமான மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையம் வந்தடைந்தார்.
கர்நாடகம் மாநிலத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமான மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அடைந்தார். அங்கிருந்து காா் மூலம் பெங்களூரை அடுத்த கனகபுரா மாவட்டம், ராம்நகரில் முரசொலி செல்வம் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறாா்.
ஒசூர் விமான நிலையம் வந்த முதல்வர் மு. க .ஸ்டாலினை ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய் . பிரகாஷ், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன், ஒசூர் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் திமுகவினர் புத்தகம், சால்வை அணிவித்து வரவேற்றனர்.
ராம்நகரில் நடைபெறும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் ராம்நகரில் இருந்து ஒசூா் விமான நிலையத்துக்கு காரில் வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறாா். விமான நிலையத்தில் இருந்து தளி சாலை, சூசூவாடி, மாவட்ட எல்லை வரை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.