அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அப்படி கூட்டணி அமைந்தால் பாஜகவை கழட்டி விட்டுவிட்டு அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்...
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன்.
Published on
Updated on
2 min read

திருச்சி: அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அப்படி கூட்டணி அமைந்தால் பாஜகவை கழட்டி விட்டுவிட்டு அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் உரிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதி உதவி அளிக்க உள்ளோம். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

நெரிசலால் ஏற்பட இறப்புகள் வெளிப்புற நிலை தூண்டுதலால் ஏற்பட்ட இறப்பு என தவெக தரப்பில் கூறுகிறார்கள். கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் புற தூண்டுதலால் நடப்பது அல்ல. நெரிசல் சாவுகள் பல்வேறு சம்பவங்களில் நடந்துள்ளது.

அண்ணாமலைக்கு கற்பனையாக பேசுவது வாடிக்கை

இல்லாத பொல்லாத கட்டுகதைகளை பேசுவதும் கற்பனையாக பேசுவதும் அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது. அரசியல் செய்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. சமூக பதட்டத்தை உருவாக்குவதிலே அவர் குறியாக இருக்கிறார்.

விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்பட போகிறது?

விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்பட போகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மக்கள் செல்வாக்கோடு இயங்கக்கூடிய தலைவராக இருக்கின்ற சூழலில் அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கூடிய அளவுக்கு என்ன சூழல் நிலவுகிறது என்பது அண்ணாமலை தான் விளக்க வேண்டும்.

கரூர் சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்வது ஏன்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் என்ன பின்னணியில் விசாரிக்கப்படுகிறதா, சட்டப்பூர்வமாக தான் நிகழ்கிறதா என்பது தெரியவில்லை. நீதிபதிகள் தான் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

விஜய்யிக்கு பாதுகாப்பு தேவைதான்

தவெக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு தனக்கு பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீதிமன்றத்தில் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, விஜய் மக்கள் செல்வாக்கு மிக்கவர் அவர் செல்லும் போது பாதுகாப்பு தேவைதான் அவர் கோரிக்கை வைத்ததில் எந்த தவறும் இல்லை.

அதிமுக பரப்பும் வதந்தி

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கும் சூழலில் விஜய் தனது கொள்கை எதிரியாக கூறும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெறுவாரா? என்பது தெரியவில்லை. அப்படி கூட்டணி வைத்தால் பாஜக வை கழட்டிவிட அதிமுக தயாராக இருக்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது. அப்படி பாஜகவை கழட்டி விட்டால் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்.

யூகத்திற்கு பதில் கூற முடியாது

அதிமுக - தவெக கூட்டணி திமுக கூட்டணியை பாதிக்குமா என்கிற கேள்விக்கு யூகத்திற்கு பதில் கூற முடியாது.

தவறான கருத்துகள்

சென்னையில் என்னுடைய கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறி சில தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது.

அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக முந்தி கொண்டு கருத்து கூறி பதட்டத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார். அவர் முந்தி கொண்டு கருத்து கூறியது உள்நோக்கம் கொண்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்.

அடங்க மறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கூறிய அரசியல் முழக்கம்.

எனக்கு பாதுகாப்பாக என்னுடைய தொண்டர்கள் இருப்பார்கள் என்றார்.

மேலும், எனது கார் மோதியது என நிரூபித்தால் நான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என்று திருமாவளவன் கூறினார்.

Summary

ADMK-TVK alliance is a rumor spread by ADMK says Tholl. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com