தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

சாணார்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
திண்டுக்கல் டிஎஸ்பியுடன்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட தவெகவினர்.
திண்டுக்கல் டிஎஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட தவெகவினர்.
Published on
Updated on
1 min read

சாணார்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக திமுக நிர்வாகி செல்வகுமார், தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் திண்டுக்கல் சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை (அக்.12) தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரை கைது மாலை வரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வந்தனர்.

தவெக நிர்வாகிகளை கைது செய்து பேருந்து ஏற்றிய போலீசார்
தவெக நிர்வாகிகளை கைது செய்து பேருந்து ஏற்றிய போலீசார்

இந்த நிலையில், திடீரென சாணார்பட்டி காவல் நிலையம் முன்பு கூடிய தவெக நிர்வாகிகள், திமுக நிர்வாகி செல்வகுமார், தவெக தலைவர் விஜய் குறித்தும், திண்டுக்கல் நிர்வாகி நிர்மல் குமார் குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்பியதாக கூறி திமுக நிர்வாகியையும் கைது செய்யக்கோரி காவல் நிலையம் முன்பு போலீசாருடன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தவெக நிர்வாகிகளுடன் திண்டுக்கல் டிஎஸ்பி சங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, காவல் துறையினருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் தடியடி நடத்தி குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி கைது செய்து நீதிபதி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரையும் வாகனத்தில் ஏற்றி நீதிபதி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

Summary

Police arrested TVK executives in Shanarpatti

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com