ஏஐ உலகில் கவனம் பெறும் பெர்ஃப்லக்ஸிட்டி!

பெர்ஃப்லக்ஸிட்டி குறித்து...
Perplexity
Perplexity
Published on
Updated on
1 min read

இந்தியாவில் தயாரான பெர்ஃப்லக்ஸிட்டி ஏஐ பயனர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ஏஐ சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ஃப்லக்ஸிட்டி (Perplexity) செயலி பயன்பாடு முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆஃப் ஸ்டோர் (Apple App Store) ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து, ChatGPT, Gemini போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி, இந்தியர்களின் விருப்பமான ஏஐ பயன்பாடாக பெர்ஃப்லக்ஸிட்டி (Perplexity) உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவைச் சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு ஏஐ வெற்றியின் முக்கியமான தருணமாக இது பார்க்கப்படுகிறது. உலக தரத்தில் போட்டியிடும் திறன் கொண்ட உள்ளூர் வளர்ச்சியின் அடையாளத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல்லாக தொழில்நுட்ப வல்லுநர்களால் கவனிக்கப்படுகிறது.

உலகளவில் மாறி வரும் ஏஐ பயன்பாட்டில் Perplexity ஒரு சாதாரண சாட் பாட்டாக (chat bot) மட்டும் அல்ல தேடல், உரையாடல், மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு சூப்பர் ஏஐ செயலி ஆகும். மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்குவய்தாக பயன்பாட்டாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Perplexity-யின் வேகமான வளர்ச்சி, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப துறையின் இரண்டு முக்கிய முகங்களான சோகோவின் (Zoho) ஸ்ரீதர் வேம்பு மற்றும் ஶ்ரீனிவாஸ் ஆகியோரின் முயற்சியில் Zoho நிறுவனத்தின் உறுதியையும் Perplexity குழுவின் AI புதுமையையும் இணைத்து, ஏஐ உலகின் இந்தியாவுக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர்.

மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் வழியே இந்தியர்கள் தற்போது தங்களுக்கே உரிய ஏஐ தீர்வாக Perplexity-யை ஏற்றுக் கொண்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் தேவை, மொழி, மற்றும் கனவுகளைப் புரிந்து கட்டப்பட்ட இந்த பயன்பாடு, நாட்டின் டிஜிட்டல் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

Perplexity-யின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத்துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சிறுநகர கணிப்பொறி திறனர்களிடமிருந்து, பன்னாட்டு தொழில் தலைவர்கள்வரை இந்தியாவின் டிஜிட்டல் அடையாளம் மாறி வருவதில் அந்த மாற்றத்தின் முன்னணியில் இப்போது Perplexity தனித்த இடத்தைப் பெறுகிறது.

மேலும், இப்போதெல்லாம் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்மால அவற்றை உருவாக்குவதிலும் உலகளவில் போட்டியிட்டு வருவது சர்வதேச அளவில் விவாதமாகே மாறியுள்ளது.

Summary

india's preplexity AI is gaining attention

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com