பாதுகாப்பு அம்சங்களுக்கான 5 ஸ்டார்களைப் பெற்ற கார்கள்!

பாதுகாப்பு அம்சங்களுக்கான 5 ஸ்டார்களைப் பெற்ற கார்கள் பற்றி...
டொயோட்டா ஹைகிராஸ்
டொயோட்டா ஹைகிராஸ்Photo: Toyota website
Published on
Updated on
2 min read

பாரத் என்கேப் (Bharat NCAP) பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்களை பெற்ற 5 கார்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு கார் பிரியர்கள் புதிய கார்களை வாங்குவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தியாவில் கடந்த நவராத்திரி காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிகளவிலான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாரத் என்கேப் பாதுகாப்பு சோதனையில் அதிக ஸ்டார்களை பெற்ற கார்களின் சிறப்பம்சங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

பாரத் என்கேப் என்றால் என்ன?

பாரத் என்கேப் (Bharat NCAP) என்பது புதிய கார்களின் பாதுகாப்பை மதிப்பீடு செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

சர்வதேச அளவில் செயல்படும் குளோபல் என்கேப் (Global NCAP) போன்றே, வாகனங்களை கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தி, அதன் பாதுகாப்பு செயல்திறனுக்கேற்ப ஸ்டார்களை வழங்கி வருகின்றது.

டொயோட்டா ஹைகிராஸ்

டொயோட்டா ஹைகிராஸ் மாடல் காரை டிஎன்ஜிஏ தளத்தில் கட்டமைத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹைகிராஸ் மாடல் கார், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான வசதிகளை வழங்குகிறது.

பாரத் என்கேப் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பு சோதனையில் இந்த காருக்கு 5 ஸ்டாரை வழங்கியுள்ளது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், டைனமிக் ரேடார் குரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், காரின் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆண்டிலாக் பிரேகிங் அமைப்பு, பார்கிங் சென்சார் கேமிராக்கள் உள்ளன. அனைத்து சக்கரங்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

கியா சைரோஸ்

கியா நிறுவனம் உற்பத்தி செய்த கார்களில் சைரோஸ் மாடல்தான் முதல்முறையாக பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்ற எஸ்யூவி கார்.

இந்த காரில் 16 தானியங்கி பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இரண்டாம் நிலை அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், 20 -க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கியா சைரோஸ்
கியா சைரோஸ்Photo: Kia website

ஸ்கோடா கைலாக்

இந்தாண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கோடா கைலாக் மாடல் எஸ்யூவி வகை கார், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்புக்கு பாரத் என்கேப்பின் 5 ஸ்டார்களைப் பெற்றுள்ளது.

இந்த காரில் 6 ஏர் பேக்குகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பார்கிங் சென்சார் கேமிரா உள்பட 25 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கைலாக்
ஸ்கோடா கைலாக்Photo: Skoda website

டாடா ஹாரியர் இவி

7 ஏர் பேக்குகளைக் கொண்ட டாடா ஹாரியர் இவி காரும் பாரத் என்கேப்பின் 5 ஸ்டார்களைப் பெற்றுள்ளது. ஆல்வீஸ் டிரைவ் கொண்ட எலக்ட்ரிக் காராக உள்ள ஹாரியர் இவி மாடலில் 20 அம்ச பாதுகாப்புகள் கொண்ட அடாஸ் லெவல் 2 தொழில்நுட்பம் உள்ளது.

எச்.டி. ரியர் கேமிரா, 540 டிகிரி டிரான்ஸ்பிரண்ட் மோடு, 360 டிகிரி கேமிரா, எஸ்.ஓ.எஸ். தொடர்பு அமைப்பு, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

டாடா ஹாரியர் இவி
டாடா ஹாரியர் இவிPhoto: Tata website

மாருதி டிசையர்

இந்தியாவில் பாரத் என்கேபின் 5 ஸ்டார்களைப் பெற்ற முதல் செடான் வகை காராக மாருதி டிசையர் உள்ளது. டிசையர் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வேரியண்டகளிலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராமிங் உள்ளன. ஹில் ஹோல்ட் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமிரா, ஸ்பீட் சென்சிட்டிவ் டோர் லாக்கிங், அதிவேக எச்சரிக்கை, ரிவர்ஸ் கேமிரா உள்பட பல அம்சங்கள் உள்ளன.

Summary

Cars that received Bharat NCAP's 5 stars for safety features

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com