

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டராப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சாரிவால் வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டராப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்துள்ளது.
குன்னூர் காந்திபுரத்தில் மழைக்கு சனிக்கிழமை குணசேகரன் என்பவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்போது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காந்திபுரம் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி நடப்பதால் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டு, ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா். மீட்பு உதவிக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.