தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை..!

தீபாவளிக்கு மறுநாள்(அக்டோபர் 21) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை
Published on
Updated on
1 min read

தீபாவளிக்கு மறுநாள்(அக்டோபர் 21) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு

பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பால் நாளை சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has declared holiday on October 21st.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com