
தில்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
அப்போது கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டில் ஒத்துழைப்பு, மீனவர்கள் நலன் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தார்.
அப்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் இலங்கையில் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
மேலும் ஒத்துழைப்பிற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கி அதிபர் அநுர குமார திசநாயகவுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.