
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ‘ரூல் கா்வ்’, விதியின்படி கேரளப் பகுதியில் உபரி நீர் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 17, 828 கன அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் 137.80 அடியாக உயர்ந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ரூல் கர்வ் விதியின்படி, கேரளப் பகுதியில் வினாடிக்கு 3,763 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: தேனி மாவட்டம், மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வைகை அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 12,589 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.