
சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறிபட்டதால் அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டதால் 109 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னையில் 104 பணிகள், 5 விமான ஊழியர்கள் என 109 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் பெங்களூரு புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து அந்த விமானம் ஓடுபாதையில் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமான நிறுவன பொறியாளர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்டிருந்து இயந்திரக் கோளாறை சரிசெய்தனர்.
இதையடுத்து விமானம் வழக்கமான நேரத்தைவிட தாமதமாக பிற்பகல் 12 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால் 109 பேரின் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
விமானத்தில் 104 பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி இயந்திரக் கோளாறு ஏற்படுவது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.