குழந்தையை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.
குழந்தையை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

சென்னையில் இரண்டரை வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்

சென்னையில் இரண்டரை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக அகற்றினர்.
Published on

சென்னையில் இரண்டரை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக அகற்றினர்.

சென்னை பெரம்பூர் அருகே வசித்து வருபவர்கள் லட்சுமி, ரமேஷ் தம்பதி. இவர்களின் இரண்டரை வயது குழந்தையின் தலையில் அலுமினிய பாத்திரம் ஒன்று சிக்கிக்கொண்டது.

எவ்வளவு முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து சென்னை பெரம்பூர் செம்பியம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புக் குழுவினர் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை கத்திரிக்கோலால் வெட்டி அகற்றினர்.

இதன்பிறகே குழந்தையின் பெற்றோர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

Summary

Firefighters successfully removed a pot stuck in the head of a two-and-a-half-year-old kid.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com