
சென்னை அடுத்த செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு, திருமழிசையில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு, திருமழிசையில் செயல்பட்டு வரும் 3 தனியார் பள்ளிகளுக்கு பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடங்களுக்கு வந்த ஆவடி சரக காவல்துறையினர், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பள்ளிகளின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால், வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வெடிகுண்டு சோதனையால் மாணவர்களுக்கு எந்தவிட இடர்பாடுகளும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்மந்தப்பட்ட பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.