

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் மூன்று பேர் பலியாகினர்.
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பியமாதேவி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, அதன் ஓட்டுநர் திடீரென லாரியை அதன் பாதையிலிருந்து சற்று திருப்பியுள்ளார்.
அப்போது அதே திசையில் பின்னால் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் பலியானவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த எலவனாசூர்கோட்டை போலீசார், பலியான மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.