இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு வருவதாக பல கோடி மோசடி: அதிமுகவினர் 3 பேர் கைது

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி பல கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் கைது தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி பல கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அதிமுக 8 ஆவது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன்(52,), அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் அதிமுக உறுப்பினர் ராணி நாச்சியார் (53) மற்றும் சிலர் இணைந்து தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பனிடம் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பழனியப்பன் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

அதில், தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) நடத்தி வரும் ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அதிமுக 8 ஆவது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன்(52), கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் (53) மற்றும் சிலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தைகளை கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னிடம் 1 கோடியே 38 லட்சம் மோசடி செய்ததாகவும் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் பட்டுராஜன், கந்தநிலா,ராணி நாச்சியார் ஆகிய மூவர் மீதும் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அதிகாலை 4 மணியளவில் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஐயப்பன் வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடுவர் ஐயப்பன் அவர்களை 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன் சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளர், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர் உள்ளிட்ட சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Multi-crore fraud involving doubling of Iridium investment, 3 ADMK members arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com