

புது தில்லி: ஆந்திரம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.
ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து 42 பேருடன் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டு வநதவர் உள்பட 15 பேர் பலியானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் இரங்கல்:
இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் தளத்தில்...
"ஆந்திரம் மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட ஒரு கோர பேருந்து தீ விபத்தில் 15 பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று முர்மு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.